தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் சமீபத்தில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டு பணியிடை நீக்கம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு பஞ்சப்படி வழங்கக் கூடாதெனவும் அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
பள்ளிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்நிலையில், அவற்றின் அடிப்படையில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ”தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படாத அளவுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், புகார் பெட்டிகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களையும் மாணவிகளுக்கு தெரியும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். கல்வித்துறை அலுவலர்கள், தனியார் பள்ளிகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா என்பதை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அணுக்கழிவு விவகாரம்: பிரதமருக்கு டி.ஆர். பாலு கேள்வி!