ETV Bharat / city

தமிழ்நாடு மின் வாரியத்திற்கு அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம் - National Green Tribunal Act

நீலகிரியில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்சார கம்பியை மிதித்த ஒரு ஆண் யானை, நான்கு காட்டுப்பன்றிகள், இரண்டு கீரிப்பிள்ளைகள், மூன்று நல்ல பாம்புகள் உள்ளிட்டவை இறந்துபோன விவகாரத்தில் தமிழ்நாடு மின் வாரியம் இழப்பீடு வழங்க வேண்டுமெனப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பசுமை தீர்ப்பாயம்
பசுமை தீர்ப்பாயம்
author img

By

Published : Jan 20, 2022, 6:22 AM IST

நீலகிரி: பந்தலூர் வனப்பகுதியில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்சார கம்பியை மிதித்த ஒரு ஆண் யானை, நான்கு காட்டுப்பன்றிகள், இரண்டு கீரிப்பிள்ளைகள், மூன்று நல்ல பாம்புகள் உள்ளிட்டவை இறந்துபோனதாக பத்திரிகையில் வெளியான செய்தியை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.

விசாரணைக்குப் பின்பு தீர்ப்பாய நீதித் துறை உறுப்பினர் கே. ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்,

வன விலங்குகள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை

வனப்பகுதியில் மின்சார கம்பிகள் அறுந்து விழும்பட்சத்தில் தானாகவே மின்சாரம் தடைபடும் வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களால் வன விலங்குகள் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பூமிக்கு அடியில் மின்சார கம்பிகளைக் கொண்டுசெல்ல வழிவகை செய்ய வேண்டும் என்றும், இதைச் செயல்படுத்தும்போது மின்சார கம்பிகள் செல்லும் பகுதிகளை வன விலங்குகள் கடக்கும்போது தானாகவே மின்சாரம் தடைபடும் வகையில் சென்சார் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களைப் பொருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

வனவிலங்குகள் உயிரிழப்புக்குத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்தான் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள தீர்ப்பாயம், வனத் துறைக்கு இழப்பீடாக 75 லட்ச ரூபாயை வழங்க வேண்டுமென டான்ஜெட்கோவிற்கு (TANGEDCO) உத்தரவிட்டு,

உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

அந்தத் தொகையை மின்சாரத் தாக்குதலிலிருந்தும், மனிதர்கள் வேட்டையாடுவதிலிருந்தும் வன விலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவப் படிப்பு கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.