விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான நல்லகண்ணு இன்று தனது 96ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். அதற்காக அவருக்குப் பல அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்தும், சமூக வலைதளங்களில் அவர் குறித்து பகிர்ந்தும் வருகின்றனர்.
அந்த வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நல்லகண்ணுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “பொதுவுடைமை இயக்கத்தின் மூத்தத் தலைவர்; தொண்டறமே வாழ்வெனக் கொண்டவர். எளிமை-தியாகம்-நேர்மை இவற்றின் இலக்கணமாக அரசியல் கடலின் கலங்கரை விளக்கமாக இருந்து ஒளியூட்டி வழிகாட்டும் பெருந்தோழர் நல்லகண்ணு பிறந்தநாளில் நேரில் சந்தித்து கழகத்தின் சார்பில் வாழ்த்தி மகிழ்ந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுனாமி நினைவுநாளுக்கும் ட்வீட் செய்துள்ளார். அதில், “இயற்கையின் சீற்றத்தால் ஆறாத வடுவாகிவிட்ட ஆழிப் பேரலைப் பேரழிவின் 16ஆம் ஆண்டு! 2004 டிசம்பர் 26 #Tsunami-ல் உயிரிழந்தோரை நினைவில் ஏந்துவோம்! உடைமை இழந்தோரின் உரிமை காப்போம். சீற்றங்கள் குறைந்திடும் வகையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...தொடர் கொலை மிரட்டல்! - பாதுகாப்பு கேட்கும் பெண் ஊராட்சி மன்றத் தலைவர்!