ETV Bharat / city

தமிழ்நாடு அரசுக்கு நபார்டு வங்கி ரூ. 2,485 கோடி நிதி உதவி! - தமிழ்நாடு அரசுக்கு நபார்டு வங்கி ரூ. 2485 கோடி நிதி உதவி

சென்னை: கூட்டுக்குடிநீர் உள்ளிட்ட திட்டங்களில் தமிழ்நாடு அரசுக்கு உதவும் வகையில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) ரூ.2,485 கோடி நிதியுதவி வழங்கவுள்ளது.

NABARD Bank has provided Rs 2485 crore financial assistance to TN Govt.

author img

By

Published : Jul 23, 2020, 2:57 AM IST

நபார்டின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (ஆர்.ஐ.டி.எஃப்), நபார்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு உதவி (நிடா) ஆகிய திட்டங்களின் கீழ் சேலம், சிவகங்கை மாவட்டங்களில் 17.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.2,066 கோடிக்கு அனுமதி வழங்கிள்ளது.

மேலும், சேலம் மாவட்டம் தலைவாசலில் உயர்நிலை ஒருங்கிணைந்த கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.419 கோடி வழங்கியுள்ளது என நபார்டின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் தலைமைப் பொது மேலாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு அரசுக்கு உதவும் நபார்டு வங்கி ரூ.2,485 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல் தந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.