ETV Bharat / city

ராஜிவ் கொலை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: சீமான் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு - naam tamilar party seeman speech

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் ராஜிவ் கொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நாம் தமிழர்க் கட்சியின் ஒருங்கிணைபாளர் சீமான் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு காவல் துறை தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.

naam tamilar Seeman
author img

By

Published : Oct 14, 2019, 10:44 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினரின் பொறி பறக்கும் பரப்புரை நடைபெற்றுவருகிறது. இதில் அதிமுக, திமுக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. இத்தேர்தலில் யாருக்கு வெற்றி என்ற நோக்கில் அனைத்துக் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

'ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்திப் பேசிய சீமான்' - காங்கிரஸார் புகார்!

இத்தருணத்தில், நேற்று முன்தினம் நேமூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொலை செய்தோம்' எனப் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

ராஜீவ் கொலை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: சீமான் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!

இதனையடுத்து மறைந்த ராஜிவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்குக் காவல் துறையினர் சார்பில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Intro:Body:*நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு*

முன்னாள் பிரதமர்
ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய சீமான் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்க்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.