சென்னை நகரில் உள்ள காவல் நிலையங்களுக்கு பயிற்சி பெற்ற காவலர்கள் அனுப்பப்பட்டனர். அவ்வாறு பயிற்சி நிறைவு பெற்ற மூன்று காவலர்கள், சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்தனர். வழக்கமாக புதிதாக பணிக்கு வரும் காவலர்களுக்கு காவல் ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர்கள் தான் பயிற்சி அளிப்பார்கள்.
ஆனால், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இன்று காலை வந்த புது காவலர்களுக்கு, மயிலாப்பூர் உதவி ஆணையர் ரமேஷ் பல்வேறு பயிற்சிகளை அளித்தார். அப்போது அவர், உயரதிகாரிகள் வந்தால் அவர்களை வரவேற்று மரியாதை செலுத்துவது பற்றி சுமார் ஒரு மணி நேரம் பயிற்சி கொடுத்தார்.
மேலும் துப்பாக்கிகளைக் கொண்டு மரியாதை செய்யும் ட்ரில் பற்றியும், சல்யூட் வைப்பது போன்ற அனைத்து முறைகளையும் அவர் பொறுமையாக கற்றுக் கொடுத்தார்.
உதவி ஆணையர் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் காவலர்களை அழைத்து அவர்களிடம் அன்பாக பேசி காவலர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகள் பற்றி உதவி ஆணையர் ரமேஷ் வகுப்பு எடுத்தது காவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.