சாகித்ய அகாதமி விருது பெற்ற கேரளவாழ் தமிழ் எழுத்தாளர் ஆ. மாதவன் இன்று (ஜன. 05) உடல்நலக் குறைவால் காலமானார். திருவனந்தபுரத்தில் உள்ள கைதமுக்கு என்ற இடத்தில் தன்னுடைய மகள் கலைச்செல்வியின் குடும்பத்துடன் வசித்துவந்த மாதவனுக்கு கடந்த வாரம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று மதியம் இறந்தார். அவரது உடலுக்கு ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
-
புனலும் மணலும், கிருஷ்ணப் பருந்து உள்ளிட்ட அற்புதமான படைப்புகளைத் தந்த மகத்தான எழுத்தாளர் ஆ. மாதவன் மறைந்தார். கடைத்தெருவின் கலைஞனுக்கு என் அஞ்சலி.
— Kamal Haasan (@ikamalhaasan) January 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">புனலும் மணலும், கிருஷ்ணப் பருந்து உள்ளிட்ட அற்புதமான படைப்புகளைத் தந்த மகத்தான எழுத்தாளர் ஆ. மாதவன் மறைந்தார். கடைத்தெருவின் கலைஞனுக்கு என் அஞ்சலி.
— Kamal Haasan (@ikamalhaasan) January 5, 2021புனலும் மணலும், கிருஷ்ணப் பருந்து உள்ளிட்ட அற்புதமான படைப்புகளைத் தந்த மகத்தான எழுத்தாளர் ஆ. மாதவன் மறைந்தார். கடைத்தெருவின் கலைஞனுக்கு என் அஞ்சலி.
— Kamal Haasan (@ikamalhaasan) January 5, 2021
மறைந்த எழுத்தாளர் ஆ. மாதவனுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “புனலும் மணலும், கிருஷ்ணப் பருந்து உள்ளிட்ட அற்புதமான படைப்புகளைத் தந்த மகத்தான எழுத்தாளர் ஆ. மாதவன் மறைந்தார். கடைத்தெருவின் கலைஞனுக்கு என் அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : மலையாள மண்ணில் பிறந்த தமிழ் எழுத்தாளர் ஆ. மாதவன் மறைந்தார்!