ETV Bharat / city

மத்திய, மாநில அரசுகள் சர்வாதிகார போக்குடன் செயல்படுகின்றன: முத்தரசன் குற்றச்சாட்டு - கனிமொழி

சென்னை: தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு.

cpi
author img

By

Published : Apr 17, 2019, 8:50 AM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ”மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட காரணத்தால் தேர்தலை சீர்குலைக்க எங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு பல்வேறு இடையூறுகளை மத்திய அரசு கொடுத்து வருகிறது. சுதந்திரமாக செயல்பட வேண்டிய வருமானவரித் துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்திவருகிறது.

மேலும் தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுவருகிறது. ஆண்டிப்பட்டியில் அமமுக தேர்தல் பணிமனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என்பது பொதுமக்களையும், அரசியல் கட்சிகளையும் அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். தமிழ்நாட்டிலேயே தேனி தொகுதியில்தான் அதிக பண மழை பொழிந்து வருகிறது” என்றார்.

Intro:Body:

Intro:தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காக மத்திய மாநில அரசுகள் சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு.

Body:தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காக மத்திய மாநில அரசுகள் சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது...

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட காரணத்தால் தேர்தலை சீர்குலைக்க,எங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு பல்வேறு இடையூறுகளை மத்திய அரசு கொடுத்து வருகிறது.

சுதந்திரமாக செயல்பட வேண்டிய வருமான வரித்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது.

மேலும் தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும், என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டு வருகிறது.

ஆண்டிப்பட்டியில் அமமுக தேர்தல் பணிமனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என்பது பொதுமக்களையும், அரசியல் கட்சிகளையும் அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். எனவே இதை கண்டிப்பதாகவும், தமிழ்நாட்டிலேயே தேனி தொகுதியில் தான் அதிக பண மழை பொழிந்து வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை கேள்விக்குறி ஆகி விடக்கூடாது என தெரிவித்தார்.

Conclusion:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.