ETV Bharat / city

’காவல்துறை மீது கல் வீசியது ஆர்எஸ்எஸ்காரர்கள்’ - இஸ்லாமிய அமைப்புகள் டிஜிபியிடம் புகார்

சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நேற்று வண்ணாரப்பேட்டையில் நடந்தப் போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தினர். இந்தத் தடியடிக்கு உரிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், போராட்டம் செய்தவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும் காவல்துறை இயக்குநர் திரிபாதியை சந்தித்து இஸ்லாமிய அமைப்புகள் புகாரளித்தனர்.

meet dgp
meet dgp
author img

By

Published : Feb 15, 2020, 11:24 PM IST

தமிழ்நாடு முஸ்லிம் லீக், தமிழ்நாடு சுன்னத் ஜமாத், இந்திய தேசிய லீக், ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கட்சிகள் டிஜிபி திரிபாதியை சந்தித்து இன்று புகாரளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் முஸ்தபா, ”குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வண்ணாரப்பேட்டையில் நேற்று அமைதியான முறையில் மக்கள் போராட்டம் செய்தனர். போராட்டம் முடிவடையும் தருவாயில் போராட்டத்தைக் கலவரமாக்கும் முயற்சியில் ஆர்எஸ்எஸ்காரர்கள் போராட்டக்காரர்களின் உள்ளே நுழைந்தனர்.

தடியடிக்கு முன்பு கூட்டத்திலிருந்த ஆர்எஸ்எஸ்காரர்கள் கல் எறிந்தனர். போராட்டத்தை வன்முறையாக மாற்றவே ஆர்எஸ்எஸ் நபர்கள் போராட்டக்காரர்கள் வேடத்தில் அங்கு வந்திருந்தனர். இதற்கு ஆதாரமாக சென்னை காவல்துறை வைத்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தடியடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் நேற்றிரவு போராட்டம் நடைபெற்றது. அவர்கள் மீது காவல் துறையினர் பொய்யான வழக்குப் பதிந்துள்ளனர். அந்த வழக்கை திரும்பப் பெறவேண்டும் என டிஜிபி திரிபாதியை சந்தித்து புகார் அளித்தோம்

நடிகர் ரஜினிகாந்த் இந்தக் கலவரத்தைப் பற்றி வாய் திறக்காதது ஏன்? ஏனெனில், அவர் பாஜகவின் கூஜாவாக இருந்து வருகிறார். அதிமுக அரசும் பாஜகவின் கூஜாவாக செயல்பட்டு வருகிறது. இந்தத் தடியடி தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: CAA-க்கு எதிராக நள்ளிரவில் போராடிய இஸ்லாமிய அமைப்பினர் மீது வழக்குப்பதிவு!

Intro:Body:*குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நேற்று வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இந்த தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உரிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், மேலும் போராட்டம் செய்தவர்கள் மீது பதியப்பட வழக்குகளை திரும்ப பெறவும் பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் தமிழக டிஜிபி ஜேகே திரிபாதியை சந்தித்து புகார் அளித்தனர்.*

தமிழ்நாடு முஸ்லிம் லீக், தமிழ்நாடு சுன்னத் ஜமாத், இந்திய தேசிய லீக், ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கட்சிகள் டிஜிபி திரிபாதியை சந்தித்து புகார் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் முஸ்தபா, குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வண்ணாரப்பேட்டையில் நேற்று அமைதியான முறையில் மக்கள் போராட்டம் செய்தனர். போராட்டம் முடிவடையும் தருவாயில் போராட்டத்தை கலவரம் ஆக்கும் முயற்சியில் ஆர்எஸ்எஸ்.,காரர்கள் போராட்டக்காரர்களின் உள்ளே நுழைந்தனர்.

போலீசாரின் தடியடிக்கு முன்பு கூட்டத்திலிருந்த ஆர்எஸ்எஸ் காரர்கள் கல் எறிந்தனர். போராட்டத்தை வன்முறையாக மாற்றவே ஆர்எஸ்எஸ் நபர்கள் போராட்டக்காரர்கள் வேடத்தில் அங்கு வந்து இருந்தனர். இதற்கு ஆதாரமாக சென்னை காவல்துறை வைத்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.

மேலும் இந்த தடியடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நேற்று இரவு போராட்டம் நடைபெற்றது. அவர்கள் மீது காவல்துறையினர் பொய்யான வழக்கு பதிந்துள்ளனர். அந்த வழக்கை திரும்ப வாபஸ் பெறவேண்டும் என டிஜிபி ஜேகே திரிபாதியை சந்தித்து புகார் அளித்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும் போராட்டத்தைப் பற்றி அவ்வப்போது வாய்திறந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் இந்த கலவரத்தை பற்றி வாய் திறக்காதது ஏன்? ஏனெனில் அவர் பிஜேபியின் கூஜாவாகவே இருந்து வருகிறார்.

அதிமுக அரசும் பிஜேபியின் கூஜாவாக செயல்பட்டு வருகிறது. நடந்த இந்த தடியடி தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க திட்டமிட்டு உள்ளோம் என அவர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.