சென்னை: அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாகவுள்ள முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர் பணியிட மாறுதலுக்கான உத்தரவினை இன்று (நவ.16) பிறப்பித்துள்ளார்.
அலகாபாத் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள முனீஸ்வரர் நாத் பண்டாரி கடந்த 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவர்.
பின்னர், சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவுச் செய்த பண்டாரி, சிவில், கிரிமினல், தொழிலாளர் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். ராஜஸ்தான் அரசின் பல்வேறு வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தி துறையின் வழக்கறிஞராக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டுள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்ற இவர் பின்னர் 2019ஆம் ஆண்டு அலகாபாத்தில் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பணிகளை கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை கவணித்தது வந்தார்.
இந்நிலையில், முனீஸ்வரன் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவுள்ள முனீஸ்வரன் நாத் பண்டாரி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி ஓய்வுபெறவுள்ளார்.
இதையும் படிங்க: Valimai Update: வலிமை சிமெண்டின் சிறப்பம்சம் என்ன? தங்கம் தென்னரசு விளக்கம்!