ETV Bharat / city

இனி பள்ளிக் கட்டணத்தை இஎம்ஐ மூலம் செலுத்தலாம்!

சென்னை: மாதாந்திர தவணை மூலம் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்தும் திட்டத்தை மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ஃபினான்ஸ் பீர் அறிமுகப்படுத்தியுள்ளது.

EMI
EMI
author img

By

Published : Jun 4, 2020, 5:20 PM IST

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார முடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலானோர் வேலையிழந்து வருமானமின்றி பொருளாதார ரீதியாக பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் அடுத்தகட்மாக பள்ளிகள் திறக்கும் போது குழந்தைகளுக்கு எவ்வாறு கல்விக் கட்டணம் செலுத்துவது என பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், செல்போன், டிவி, வீட்டு உபயோக பொருள்களுக்கு வட்டியில்லாக கடன் திட்டம் (இஎம்ஐ) திட்டம் உள்ளதைப் போல் பள்ளிக் கட்டணத்தை செலுத்த புதிய வகையான இஎம்ஐ திட்டத்தை மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ஃபினான்ஸ் பீர் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனம், மாணவர்கள் பெற்றோர்களிடம் இருந்து எந்தவித பிணையும் பெறாமல், மாணவர்களுக்கு தேவையான முழுக் கல்வி கட்டணத்தையும் செலுத்தும். பெற்றோர்கள் இந்த தொகையை குறிப்பிட்ட கால இடைவெளியில் 3 மாதம் முதல் 12 மாதங்கள் வரை சிறிய தவணையாக திரும்ப செலுத்தலாம்.

ஒரு மாணவர்களுக்கு அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் வரை கல்வி கட்டணம் செலுத்தப்படும். இதற்காக எந்தவித நேரடி அல்லது மறைமுக கட்டணமும் பெற்றோர்களிடமிருந்து பெற போவதில்லை என அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் கல்விக் கட்டணம், பள்ளி வாகன கட்டணம், புத்தக கட்டணம், சீருடை கட்டணம் என பல்வேறு கட்டணங்களுக்கு பொருந்தும். திட்டத்தில் இணைந்த பெற்றோர்கள் உயிரிழக்க நேரிட்டால் மாணவர்களின் கல்வி கட்டணத்தை இந்நிறுவனம் கவனித்துகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.