சென்னை: தாம்பரம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, குடியிருப்புப் பகுதிகளின் முக்கிய வீதிகளில், பொதுமக்களும், காவல்துறையினரும் இணைந்து சிசிடிவி கேமராக்களை பொருத்திவருகின்றனர்.
தாம்பரம் சரக உதவி ஆணையர் சகாதேவன் அறிவுறுத்தலின்படி தாம்பரத்தையடுத்த முடிச்சூர் மேற்கு இளைஞர் நற்பணி பேரவை சார்பாக முடிச்சூர் மேற்குப் பகுதியில் திருவிக தெரு, அண்ணா தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, கம்பர் தெரு, ஆகிய நான்கு தெருக்களில் 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
விரைவில் முடிச்சூர், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
இதையும் படிங்க: ஃபேஸ்புக் காதல் திருமணம்: உயிரிழந்த மகளின் உடலை வாங்க மறுத்தப் பெற்றோர்