ETV Bharat / city

'கரோனாவுக்கு போட்டியாக புதிய நோய்' - கொள்ளை நோயான மியூகோர்மைகோசிஸ் - mucormycosis easily attacks corona patients

கரோனாவை சமாளித்து குணமடைந்தவர்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் மியூகோர்மைகோசிஸ் தொற்றின் பரவல் கரோனாவுக்கு போட்டியாக நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்த நோயை கொள்ளை நோயாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.

author img

By

Published : May 19, 2021, 8:15 PM IST

தற்போதைய சூழலில் கரோனாவின் தாக்கமும் வீரியமும் பன்மடங்காக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க மாநில, மத்திய அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் கரோனா தொற்றால் பாதிப்படைவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிப்படைந்து மீள்பவர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் புதிய வகை தொற்றான மியூகோர்மைகோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவின் பல்வேறு இடங்களில் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இது ஒரு கொள்ளை நோய் என்று ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு மியூகோர்மைகோசிஸ் எனும் நோய் எளிதில் பரவும் ஆபத்து உள்ளது. கரோனாவை சமாளித்து குணமடைந்தவர்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் மியூகோர்மைகோசிஸ் குறித்து பார்ப்போம்.

மியூகோர்மைகோசிஸ் என்றால் என்ன?

மியூகோர்மைகோசிஸ் என்பது ஒருவகை பூஞ்சையால் ஏற்படும் தொற்று ஆகும். இது ஒன்றும் புதிய நோயல்ல. ஆனால், அரிதாகவே இந்நோய் மனிதர்களுக்கு ஏற்படும். முதலில், மூக்குப் பகுதியில் ஏற்படும் இந்த நோய், விரைவிலேயே தொண்டை, கண்கள், மூளை எனப் பரவிவிடும். இந்தத் தொற்று மூளையை எட்டும் நிலையில் உயிருக்கு ஆபத்தான நோயாக மாறிவிடுகிறது. குறிப்பாக சுற்றுப்புறத்தில் உள்ள நுண்ணுயிரிகளை எதிர்த்து செயலாற்றும் திறன் இழப்பு இதனால் ஏற்படும்.

மியூகோர்மைகோசிஸ் என்றால் என்ன? ( நன்றி: அறிவியல் பலகை)

யாருக்கெல்லாம் மியூகோர்மைகோசிஸ் நோய் வர வாய்ப்பு அதிகம்?

  • இணை நோய் உள்ளவர்கள்
  • மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்தவர்கள்
  • பூஞ்சை நோய்க்கான வோரிகோனசோல் சிகிச்சை எடுப்பவர்கள்
  • கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் உடையவர்கள்
  • நோய் எதிர்ப்புச் சக்தியை மட்டுப்படுத்தும் ஸ்டீராய்டு மாத்திரைகளை பயன்படுத்துபவர்கள்
  • நீண்ட நாள்களாக ஐசியூவில் சிகிச்சை பெறுபவர்கள்
    யாருக்கெல்லாம் மியூகோர்மைகோசிஸ் நோய் வர வாய்ப்பு அதிகம்? ( நன்றி: அறிவியல் பலகை)

அறிகுறிகள்

  • கண், மூக்கைச் சுற்றி வழி / சிவந்து போதல்
  • காய்ச்சல்
  • தலைவலி
  • இருமல்
  • மூச்சு விடுவதில் சிரமம்
  • வாந்தி எடுக்கும் போது ரத்தம் வருவது
  • மனநிலை தொடர்ந்து பதற்றமாகவே இருப்பது

இந்த அறிகுறிகளை தொடக்கத்திலேயே கண்டறிந்தால் இறப்பைத் தவிர்க்கலாம்.

மியூகோர்மைகோசிஸ் அறிகுறிகள் ( நன்றி: அறிவியல் பலகை)

என்ன செய்ய வேண்டும்?

  • ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்
  • கோவிட் 19 சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோயுள்ளவர்கள், இரத்த சர்க்கரை அளவை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்
  • தவிர்க்க இயலாத சூழலில் மட்டுமே ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டும்
  • சுத்தமான, நுண்ணுயிரிகளற்ற பாதுகாப்பான தண்ணீரை மட்டுமே ஆக்ஸிஜன் தெரபிக்கு பயன்படுத்த வேண்டும்.
  • நுண்ணுயிர் கொல்லி, பூஞ்சை கொல்லி மருந்துகளை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்
    செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை ( நன்றி: அறிவியல் பலகை)

என்ன செய்யக் கூடாது?

  • அறிகுறிகள் குறித்து அலட்சியமாக இருக்க வேண்டும்
  • மூக்கடைப்பு வெறும் பாக்டீரியா நோய் என்று விட்டுவிடக் கூடாது
  • குறிப்பாக நோய்த் தடுப்பு எதிர்ப்பாற்றுலுக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்கொள்ளும் போதும் கோவிட் 19க்காக மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போதும் இந்த அறிகுறி தென்பட்டால் அலட்சியம் காட்டக்கூடாது.
  • தீவிர பரிசோதனை செய்து இந்த நோய் உள்ளதா என அறிந்து கொள்வதில் தயக்கம் இருக்க கூடாது.
  • அறிகுறி இருந்தால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்து கொள்வதில் தயக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.