ETV Bharat / city

தசை சிதைவால் பாதிக்கப்பட்ட மகனை காப்பாற்ற தாய் முதலமைச்சரிடம் கோரிக்கை! - துச்சேன் தசை சிதைவு

துச்சேன் தசை சிதைவு (Duchenne muscular dystrophy -DMD) என்ற கொடுமையான நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காப்பாற்ற அவனது தாய் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

muscular dystrophy
muscular dystrophy
author img

By

Published : Jul 3, 2021, 7:37 AM IST

சென்னை : சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சிறுவன் ஒருவர் துச்சேன் தசை சிதைவு என்ற கொடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற அவனது தாய் முதலமைச்சர் தனிப்பிரிவில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் தனிப்பிரிவில், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 8 வயது சிறுவனின் தாய் வெண்ணிலா தனது மகன் சிகிச்சைக்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் எனக் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.

8 வயது சிறுவன்

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த வெண்ணிலா கார்த்திகேயனின் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது இரண்டாவது மகனான 8 வயது சிறுவன் துச்சேன் தசை சிதைவு (Duchenne muscular dystrophy -DMD) என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நோய் சிறுவன் பிறக்கும் போது இல்லை. மாறாக அவருக்கு 4 வயது இருக்கும் போது பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆறு வயதில் பள்ளிக்கு சென்ற சிறுவன் வகுப்பறையிலும் விளையாட்டு மைதானத்திலும் இயல்பாக நடக்க முடியாமல் கீழே விழுந்துள்ளார். ஆசிரியர்களின் அறிவுரைப்படி பெற்றோர் அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

வளைந்த கால்கள் - தசை பாதிப்பு
அப்போது, இந்தியாவில் இதுவரை மருந்து கண்டுபிடிக்காத டிஎம்டி என்ற தசை சிதைவு நோயால் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளனான் என்றும் அவன் 12 வயதை எட்டும் பாேது நடக்க முடியாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நாளுக்கு நாள் நோயின் தாக்கத்தின் காரணமாக தசைகள் பலவீனமடைந்து கால்கள் வளைந்து காணப்படுகின்றன. இயன்முறை மருத்துவ உபகரணங்களை வாடகை வீட்டில் பொருத்தி சிறுவனுக்கு தாயே சிகிச்சை அளித்து வருகிறார்.

முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு
இதற்கிடையில், சிகிச்சைக்கு தேவையான மருந்து, மருத்துவ உபகரணங்களை வாங்க முடியாத நிலையில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் உதவியை நாடியுள்ளார் சிறுவனின் தாய் வெண்ணிலா.

இது குறித்து வெண்ணிலா கூறுகையில், “எங்களது மகனை குணப்படுத்த அரசு உதவ வேண்டும். முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளேன். விரைவில் அழைப்பு வரும் என்று அலுவலர்கள் கூறினார்கள்” என்றார்.

இதையும் படிங்க : தசை நார் நோயால் துன்புறும் அண்ணன், தங்கை; அரசு உதவ பெற்றோர்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.