இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தமிழ்நாடு அரசின் வழிக்காட்டுதலின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தற்போது வரை 21 லட்சத்து 46 ஆயிரத்து 680 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
அதில் 15 லட்சத்து 59 ஆயிரத்து 783 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 5 லட்சத்து 86 ஆயிரத்து 897 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதில், 45 வயது மேற்பட்டவர்களுக்கு 66.23 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
மேலும், கோயம்பேடு வணிக வளாகத்தில் 8,239 வியாபாரிகள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 2,143 வியாபாரிகள், சிந்தாதிரிப்பேட்டையில் 89 வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன" என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு வந்தடைந்த 95,000 கோவேக்சின் தடுப்பூசிகள்