இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்னக ரயில்வே பாதுகாப்புப் படையில் புதிதாக 61 துணை ஆய்வாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவற்றில், 42 பேர் ஆண்கள், 19 பேர் பெண்கள் ஆவர். அதேபோல், பணியில் சேர்க்கப்பட்டுள்ள 166 காவல்களில் 101 பேர் ஆண் காவலர்கள், 65 பேர் பெண் காவலர்கள்.
ரயிலில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இந்த முறை அதிக அளவிலான பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கரோனா காலத்தில் கடுமையான சவால்களை மீறி காவலர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். ரயில்வே துறை உடமைகளைப் பாதுகாப்பது, பணிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் அவர்கள் கவனம் செலுத்துவர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.