ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடமாடும் பரப்புரை வாகனங்களின் தொடக்க நிகழ்வு சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று (டிச.1) நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நவீன குடும்ப நல கருத்தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடமாடும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம்கள் கடந்த 28.11.2020 ஆம் தேதியன்று தொடங்கியது. வரும் டிச. 4 ஆம் தேதி வரை இராயபுரம், அடையாறு , திரு.வி.க.நகர் ஆகிய 3 நகர்ப்புற சமுதாய மையங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 வரை நடைபெறும்.
இராயபுரம் மண்டலம் : நகர்ப்புற சமுதாய நல மையம், சஞ்சீவராயன் பேட்டை, எண்.194, சோலையப்பன் தெரு,பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை-21. அலைபேசி எண்கள்: 9445190711, 9445190712, 9445190713, 9445190714, 9445190715
திரு.வி.க.நகர் மண்டலம் : புளியந்தோப்பு நகர்ப்புற சமுதாய நல மையம், எண்.40, திருவேங்கடசாமி தெரு, புளியந்தோப்பு, சென்னை-12. அலைபேசி எண்கள்: 9445190716, 9445190717, 9445190718, 9445190719, 9445190720
அடையாறு மண்டலம் : அடையாறு நகர்ப்புற சமுதாய நல மையம், எண்.2, வெங்கட்ரத்னம் நகர், அடையாறு, சென்னை-20. அலைபேசி எண்கள்: 9445190721, 9445190722, 9445190723, 9445190724, 9445190725
ஆண்களுக்கான நவீன கருத்தடை செய்து கொள்ளும் நபர்களுக்கு 1100 ரூபாயும், நவீன கருத்தடை செய்து கொள்ளும் நபரை அழைத்து வரும் நபருக்கு 200 ரூபாயும் அரசு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அப்போலோவில் பக்கவாதத்துக்குப் பிந்தைய தீவிர பராமரிப்பு மறுவாழ்வு மையம் தொடக்கம்!