ETV Bharat / city

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

moderate rainfall in tamil nadu for news 4 days

author img

By

Published : Apr 26, 2022, 1:37 PM IST

சென்னை: இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, நாமக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை( ஏப்ரல் 27) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் நாளை மறுநாள் (ஏப்ரல் 28) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 2 செ.மீ, சிற்றாறு (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.