சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
மநீம சார்பில் 24 தொகுதிகளில் போட்டியிடும் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
திரு.வி.க நகர் தொகுதி வேட்பாளராக முதலில் ரம்யா என்பவர் அறிவிக்கப்பட்டார். சிறிதுநேரத்திற்குப் பின் அவரைத் திரும்ப பெற்று ச. ஓபேத் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே முதல்கட்டமாக 70 வேட்பாளர்களையும், இரண்டாம் கட்டமாக 43 வேட்பாளர்களையும் அறிவித்திருந்த நிலையில் தற்போது 24 தொகுதிகள் என மொத்தம் 137 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தலில் மநீம, நாம் தமிழர் போட்டி - வாக்கு வங்கியைப் பாதிக்குமா?