ETV Bharat / city

'பேட்டரி டார்ச்' சின்னம் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் மனு! - சென்னை மாவட்ட செய்திகள்

பேட்டரி டார்ச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவும், எம்ஜிஆர் மக்கள் கட்சி பேட்டரி டார்ச் சின்னத்தை பயன்படுத்துவதை தடை செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி மக்கள் நீதி மய்யம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

பேட்டரி டார்ச்" சின்னம் கோரி மக்கள் நீதி மய்யம் மனு

author img

By

Published : Dec 18, 2020, 10:29 PM IST

சென்னை : 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பேட்டரி டார்ச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கி சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, புதுச்சேரியில் மட்டும் மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் பேட்டரி டார்ச் சின்னம் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் பேட்டரி டார்ச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவும், எம்ஜிஆர் மக்கள் கட்சி பேட்டரி டார்ச் சின்னத்தை பயன்படுத்துவதை தடை செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி மக்கள் நீதி மய்யம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு சட்டத்தின்படி வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பேட்டரி டார்ச் சின்னத்தை உபயோகிப்பதற்காக அனுமதி கோரி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்: ஸ்டாலின் உட்பட 1600 பேர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.