ETV Bharat / city

விவசாயிகளிடம் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை - மநீம கோரிக்கை - மநீம மாநிலச் செயலாளர் சிவ இளங்கோ

டெல்டா விவசாயிகளிடம் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது முதலமைச்சர் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மநீம மாநிலச் செயலாளர் சிவ இளங்கோ
மநீம மாநிலச் செயலாளர் சிவ இளங்கோ
author img

By

Published : Oct 20, 2021, 10:51 PM IST

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர் சிவ இளங்கோ செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் கொள்ளை குறித்து, வார இதழ் ஒன்று விரிவான செய்தித் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் நெல் கொள்முதல் செய்வதற்காக விவசாயிகள் அளிக்கவேண்டிய லஞ்சப் பணம் குறித்த விவரங்கள் துல்லியமாக வெளியிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அறுவடைப் பருவத்திலும் நெல் கொள்முதல் நிலையங்களில், சுமார் 500 கோடி ரூபாய் வரை ஊழல், லஞ்ச முறைகேடு நடைபெறுவதாக அந்த இதழ் குறிப்பிடுகிறது. சென்ற ஆட்சியைவிட தற்போது லஞ்சத்தொகை கூடியிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் அந்த இதழ், 'இதை முற்றிலும் ஒழிக்கத் தயாரா?' என்ற சவாலையும் முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி முன்வைத்துள்ளது.

பதில் அளிக்காத அமைச்சர்கள்

நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட முன்னணி இதழ், இத்தகைய சவால் ஒன்றை முன்வைத்திருக்கும் நிலையில், முதலமைச்சரோ, அமைச்சர்களோ இதுகுறித்து எந்தப் பதிலும் அளித்ததாகத் தெரியவில்லை.

டெல்டா பகுதி விவசாயிகளின் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்போது இந்தப் பிரச்னையில் முதலமைச்சரும், அமைச்சர்களும் மௌனம் சாதிப்பது நல்லதல்ல. செல்லும் இடங்களிலெல்லாம் 'இத்தனை இத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்' எனப் பட்டியலிட்டு மார்தட்டும் முதலமைச்சர், இதையும் அவருடைய சாதனைப் பட்டியலில் சேர்த்துவிட்டாரா என்ன?.

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிக்கிறார்கள். வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என்று புகழுரைக்கிறார்கள். அதேசமயம், தமிழ்நாடு விவசாயிகளை அன்றாடம் வஞ்சிக்கும் செயல்களையும் செய்கிறார்கள்.

அதுகுறித்து கிஞ்சித்தும் குற்றவுணர்ச்சியே இன்றி நடமாடுகிறார்கள். இப்போக்கு இன்று நேற்று தொடங்கியது அல்ல. நீண்டகாலமாகவே தமிழ்நாட்டு அரசியலின் நிலை இதுதான்.

செயலிலும் காட்ட வேண்டும்

சமீபத்தில் ஒரு ஊடக நிகழ்வில் பேசிய முதலமைச்சர், "ஊடகங்களின் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார். சொன்னால் மட்டும் போதாது, அதைச் செயலிலும் காண்பிக்க வேண்டும்.

அந்த வகையில், வார இதழ் சுட்டிக்காட்டியுள்ளதைக் கவனத்திற்கொண்டு, டெல்டா விவசாயிகளிடம் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், இனி இதுபோன்ற கொள்ளை நடைபெறாமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கேரள வெள்ளம்: பாதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு உதவிட முன்வாருங்கள் - அண்ணாமலை அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.