கோயம்புத்தூர் மாவட்டம் சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி தயநிதா, பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவன் அஷ்வந்த் ஆகிய இருவரும் யோகாசனத்தில் புதிய சாதனை புரிந்துள்ளனர்.
அதாவது மாணவி தயநிதா ஏழு நிமிடங்களில் ஐம்பது வகையான ஆசனங்கள் செய்து சாதனை படைத்துள்ளார். அதேபோல மாணவன் அஷ்வந்த் 30 நிமிடங்கள் பூமாசனம் செய்து சாதனை படைத்துள்ளார். அதனை பாராட்டும் விதமாக வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் அவர்களை நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
மேலும் அவர்களின் சாதனைகள் நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளதாகவும் கிராமிய புதல்வன் கலை மற்றும் பண்பாட்டு குழு இயக்குநர் கலையரசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி