தமிழ்நாட்டில் உள்ள பாலில் அதிக நச்சுத்தன்மை இருப்பதாக அண்மையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து.
இதன் உண்மைத்தன்மையை உணர்ந்து முதல்வர் தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார். முன்னதாக இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மக்களுக்கு அதிமுக பதில் சொல்லவேண்டும்- மு.க.ஸ்டாலின்!