தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மே.19) அதிகாலை 3 மணியளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தேமுதிக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தேமுதிக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார். மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரிபூரண நலம் பெற வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அந்தப் பதிவில், "மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவரும் அன்பு நண்பருமான விஜயகாந்த் விரைவில் முழு உடல்நலன் பெற்று, தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க;