ETV Bharat / city

'திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தடையின்றி நிறைவேறும்!'

author img

By

Published : Dec 3, 2020, 11:36 AM IST

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தடையின்றி நிறைவேறும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

MK Stalin tweet for Differently Abled Day

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “அன்றாட வாழ்க்கைச் சக்கரத்தை உருட்டுவதைச் சவாலாக எதிர்கொள்ளும் உடன்பிறப்புகளை 'மாற்றுத் திறனாளிகள்' என அழைக்கச் செய்தவர் கருணாநிதி. அதுமட்டுமின்றி, அவர்களின் நலனுக்கென தனித் துறையை உருவாக்கித் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

கண்ணொளித் திட்டம் முதல் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் வரை - தனிப்பட்ட ஈடுபாட்டுடன் செயல்படுத்தினார். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு, துணையாகப் பயணிப்போருக்கும் பேருந்தில் கட்டணச் சலுகை மேற்படிப்பில் முழுக் கட்டணச் சலுகை என உரிமைகள் - சலுகைகள் வழங்கப்பட்டன. டிசம்பர் 3இல் அரசுப் பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விருப்ப விடுப்பு வழங்கியதும் திமுக அரசு.

திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை
திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை

கருணாநிதி ஓய்விடத்தில் மாற்றுத்திறனாளிகள் நன்றிப் பெருக்குடன் வணக்கம் செலுத்தும் நெஞ்சம் நெகிழும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

தமிழ் மக்களின் பேராதரவுடன் மாற்றம் காணவிருக்கும் ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் சட்டப்பூர்வமான உரிமைகள் அனைத்தும் தடையேதுமின்றி நிறைவேறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...கரோனா பரிசோதனை கட்டணத்தை தமிழ்நாடு குறைக்காதது ஏன்? - கமல் ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.