ETV Bharat / city

புதுச்சேரியில் ஜனநாயகப்படுகொலை :முக ஸ்டாலின் கண்டனம் - MK Stalin news in Tamil

சென்னை: ஜனநாயக படுகொலையையே லட்சியமாக கொண்டுள்ள மத்திய பாஜக அரசு புதுச்சேரியிலும் அதனை செய்துள்ளது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஜனநாயகப்படுகொலை
புதுச்சேரியில் ஜனநாயகப்படுகொலை
author img

By

Published : Feb 22, 2021, 10:45 PM IST

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின்,

  • திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி, ஜனநாயகத்தை படுகொலை செய்வதையே லட்சியமாகக் கொண்ட மத்திய பாஜக அரசு, மீண்டும் அதனைப் புதுச்சேரியில் அரங்கேற்றியிருக்கிறது.
  • துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடியைக் கொண்டு, புதுவை யூனியன் பிரதேசத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசின் உரிமைகளைப் பறித்தது.
  • மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து முதலமைச்சர்நாராயணசாமியும், கூட்டணியினரும் ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராடி வந்தன.
  • சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிற மாநிலங்களில் செய்தது போலவே எம்எல்ஏ-க்களை விலை பேசும் குதிரை பேரம் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்ததுடன், ஆளுநரை மாற்றியபோதே தெரிந்தது.
  • பாஜக-வின் மக்கள் விரோத செயல்பாடுகளையும், சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் நாராயணசாமி. ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலான செயல்பாட்டை வாழ்த்துகிறேன்.
  • தமிழ்நாட்டில் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர்கூட இல்லாவிட்டாலும், அடிமை அதிமுக-வை கைப்பாவையாக்கி ஆட்சி நடத்துவதுபோல, புதுச்சேரியில் தேர்தலைத் தள்ளிவைத்து, துணை நிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்திட முயற்சித்தால் அதனை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் திமுக துணை நிற்கும்.
  • ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து திமுக - காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...நாராயணசாமி ராஜினாமா: கவிழ்ந்தது காங்கிரஸ் ஆட்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.