சென்னையை சேர்ந்த டியூசன் ஆசிரியர் ஒருவர் இளம்பெண் ஒருவரது உதவியுடன் தன்னிடம் படிக்கும் 7ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதோடு வீடியோ எடுத்தும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சிறுமியிடம் பணம், நகைகளை மிரட்டி கேட்டு வாங்கி உள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தி. நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இந்த நிலையில் இன்று (ஜூலை 19) நீதிபதி டியூசன் ஆசிரியருக்கும் அவருக்கு உடந்தையாக இருந்த இளம்பெண்ணுக்கும் ஆயுள் தண்டனை விதித்தார். அதோடு டியூஷன் ஆசிரியருக்கு ரூ. 60 ஆயிரமும், இளம்பெண்ணுக்கு ரூ.70 ஆயிரமும் அபராதம் விதித்தார். மேலும் சிறுமியின் நகைகளை மீட்கவும், அவருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 7 சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த தந்தை அவரது தம்பி கைது