ETV Bharat / city

கடலில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி சாத்தியமா? - அமைச்சர் வெளிநாட்டுப் பயணம் - தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம்

கடலில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வது தொடர்பாக, 5 பேர் கொண்ட குழுவுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்காட்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 5 நாள் பயணம் மேற்கொள்கிறார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி
அமைச்சர் செந்தில்பாலாஜி
author img

By

Published : Jun 19, 2022, 4:04 PM IST

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் அமைந்துள்ள மின்னகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று (ஜூன்19) ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, 'மின்னகம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. மின் நுகர்வோர் குறைகளைப் போக்க கடந்த ஆண்டு ஜூன் 20ஆம் தேதி முதலமைச்சர் மின்னகம் நுகர்வோர் சேவையைத் தொடங்கி வைத்தார். மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கியதில் இருந்து ஓராண்டில் 9.16 லட்சம் புகார்களில் 9.11 லட்சம் புகார்களுக்கு 99.45% வரை தீர்வு காணப்பட்டது.
குறிப்பாக, ஸ்காட்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 5 பேர் கொண்ட குழுவாக கடலில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி சாத்தியம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள 5 நாள்கள் வெளிநாட்டுப் பயணம் இன்று செல்ல உள்ளேன். சமூக வலைதளங்களில் வரும் புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது. மின்னகம் செயலி மூலம் ஒரே சமயத்தில் 1 லட்சம் பேர் ஒரே சமயம் தொடர்பு கொண்டாலும் தீர்வு காண தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

காலிப் பணியிடங்கள்: வட சென்னை அனல் மின் நிலையத்தில் மூன்றாம் நிலைப் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும். மின் துறையில் 50 ஆயிரத்திற்கும் மேலான காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் அனைவரும் சமம் என்ற முறையில் நிகழ்காலத்திற்கு ஏற்பவும் நிதி நிலைக்கு ஏற்பவும் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 6220 மெகாவாட் கூடுதல் நிறுவனத்திறன் மின்வாரியத்துடன் இணைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதேபோல் தமிழ்நாட்டில் நிலக்கரி தட்டுபாடு ஏற்பட்ட போது 4,80,000 டன் நிலக்கரி இறக்குமதி செய்தபோது 143 டாலர் என அந்நிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் பேசி முதலமைச்சரின் துரித நடவடிக்கையால் இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்த மாநிலம் தமிழ்நாடு தான்’ எனவும் தெரிவித்தார்.

அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லாமல் அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளை வைக்கும் முட்டாள்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. உள்ளாட்சித்தேர்தல் சம்பந்தப்பட்ட புகார்களை இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கும் அரைவேக்காட்டு அரசியல்வாதிகளின் கருத்துக்கு பதிலளித்து, என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

சென்னை மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில் ஆய்வு

இதையும் படிங்க: 'படித்த முட்டாள்.. நோட்டாவோடு போட்டி.. வேலை வெட்டி இல்லையா?' - அண்ணாமலையை வசைபாடிய செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.