ETV Bharat / city

திமுக ஆட்சியில் மின் வெட்டே ஏற்படாது - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

கோடைகாலத்தில் சீரான மின்விநியோகம் நடைபெறுகிறது எனவும்; தமிழ்நாட்டில் மின் வெட்டே இல்லை எனவும் சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மின் வெட்டே இல்லை
தமிழ்நாட்டில் மின் வெட்டே இல்லை
author img

By

Published : Apr 18, 2022, 7:14 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கோடைகாலத்தில் சீரான மின்விநியோகம் செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதற்குப் பதிலளித்து பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 29ஆம் தேதி உச்சபட்ச மின் நுகர்வாக 17 லட்சத்து 196 மெகாவாட் இருந்தது.

தற்போது மின்சாரப்பற்றாக்குறை 2500 மெகாவாட் உள்ளது. அதனை சீர் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறுகிய கால மற்றும் மத்திய கால கொள்முதல் அடிப்படையில் ஏப்ரல் மாதத்திற்கு 3047 மெகா வாட்டும் , மே மாதத்திற்கு 3007 மெகாவாட் மின்சாரமும் பெறப்பட்டு வருகிறது.

மேலும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் என்.எல்.சி.யிடம் 1500 மெகா வாட் மின்சாரம் பெறப்பட உள்ளது. நாளொன்றுக்கு 72,000 டன் நிலக்கரி தேவையாக உள்ளது. ஆனால், ஒன்றிய அரசு 48,000 டன் மட்டுமே அளிக்கிறது. நிலைமையை சரிசெய்ய 48,000 டன் நிலக்கரி கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் டெண்டர் நிறைவடையும். தமிழ்நாட்டில் இதுவரை மின்வெட்டு இல்லை. பராமரிப்பு காரணங்களுக்காக போதிய முன்னறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரே மின்வெட்டு செய்யப்பட்டது. மேலும் திமுக ஆட்சியில் மின் வெட்டே ஏற்படாது' என உறுதியளித்தார்.

இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.