சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "மேல்நிலை கம்பிகளை புதைவிட கம்பிகளாக அமைக்கும் பணி சென்னை மாநகராட்சியின் பெரம்பூர், தாம்பரம், ஆவடி, அடையாறு உள்ளிட்ட கோட்டங்களில் ரூ. 1011 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 730 கோடி மதிப்பீட்டிலான பணிகள் செப்டம்பர் மாதம் நிறைவு பெறும் என்று கூறினார்
மேலும், சென்னை மாநகராட்சியின் விரிவுபடுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதைவிட கம்பிகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், இந்த பணிகள் முடிவுற்ற பின் தேவைப்படக்கூடிய இடங்களில் புதைவிட கம்பிகளாக மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 500 நியாயவிலைக் கடைகளுக்கு சொந்தக் கட்டடம்: அமைச்சர் ஐ.பெரியசாமி தந்த அறிவிப்பு!