ETV Bharat / city

'நாளைய மற்றும் நிரந்தர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்’

சென்னை: தமிழகத்தின் நாளைய முதலமைச்சர், நிரந்தர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புகழ்ந்துள்ளார்.

sengottaiyan
sengottaiyan
author img

By

Published : Feb 4, 2021, 12:01 PM IST

சென்னை கலைவாணர் அரங்கத்தில் மூன்றாம் நாள் சட்டப்பேரவை இன்று கூடியது. பேரவையில் வினா விடை நேரத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது, கவுண்டம்பாளையம் தொகுதி, சரவணம்பட்டி பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்று அத்தொகுதியின் உறுப்பினர் ஆறுக்குட்டி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்கி சரித்திரம் படைத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. தமிழகத்தின் நாளைய முதலமைச்சராகவும், நிரந்தர முதலமைச்சராகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளீர்கள், அதற்கு பாராட்டுகள். அரசின் விதிகளை பூர்த்தி செய்தால், சரவணம்பட்டி பகுதி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக மாற்றப்படும்.

2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 273 புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல், 127 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், 1,114 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 644 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், மேல்நிலை மாணவர்களுக்கு 52.17 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு, அதற்காக 34,181.72 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: எம்ஜிஆரின் பாதுகாவலர் கே.பி. ராமகிருஷ்ணன் மறைவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.