கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் காலாண்டு மற்றும் அறையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைபெற்றுவரும் நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் குறித்தும், முடிவுகளை எப்போது வெளியிடலாம் என்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், தேர்வு துறை இயக்குநர் பழனிச்சாமி மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும், பள்ளிகளை மீண்டும் திறப்பது மற்றும் ஆன்லைன் வகுப்புகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவு எப்போது?