1. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ 57.36 லட்சம் மதிப்பீட்டில் மைக்ரோ ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்படும்.
2. கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தானிய வீட்டுக் கடன் உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
3. கூட்டுறவு நிறுவனங்களால் ஏற்கனவே வீட்டு வசதிக்கடன் ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்கியது போல் தற்போது தனிநபர் நகை கடனளவு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
4. 27 கூட்டுறவு நிறுவனங்களின் அலுவலக கட்டிடங்கள் ரூ. 2.71 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கப்படும்.
5. 5 மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் 7 புதிய கிளைகளைத் துவக்கப்படும்.
6. 61 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ. 2.08 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும்.
7. 51 கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு கோடி மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்படும்.
8. நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலைகளுக்கு ரூ. 80. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டிடம் கட்டப்படும்.
9. திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகளில் பெட்ரோல்
மற்றும் டீசல் வழங்கும் நிலையம் அமைக்கப்படும்.
10. வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.7.37 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
11. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் 3 மண்டல அலுவலகங்களுக்கு சுற்றுச்சுவருடன் கூடிய புதிய அலுவலகங்கள் ரூ 2.25 கோடி மதிப்பீட்டில் கட்டுதல் மற்றும் மூன்று பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையங்கள் அமைக்கப்படும். .
12. மூன்று மாவட்ட கூட்டுறவு அச்சகங்களை ரூ1.77 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.
13. 2 மாவட்ட கூட்டுறவு அச்சகங்களுக்கு ரூ.98 லட்சம் செலவில் சொந்த அலுவலக கட்டிடம் கட்டப்படும்.
14. சென்னை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.1.05 கோடி மதிப்பில் புதிய கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.
15. சேலம் மாவட்டம் சின்னக்கல்ராயன் பெரும்பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் ரூ.75 லட்சம் மதிப்பில் வணிக வளாகம் கட்டப்படும் என 15 புதிய அறிவிப்புகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.