சென்னை கீழ்ப்பாக்கம் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், கடன் வழங்குவது குறித்தும் பொது விநியோகம் குறித்த தரவுகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. 32 லட்சத்து 72 ஆயிரத்து 291 கோடி பேருக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 20 ஆயிரத்து 117 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. துறை சார்பாக 1 கோடி 84 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு தங்கு தடையின்றி பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஐந்து ஏக்கருக்கும் மேல் உள்ள மிட்டா மிராசுதார்கள் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. திமுக ஆட்சி காலத்தில் 26 ஆயிரம் கோடியாக இருந்த கூட்டுறவு வங்கிகளின் வைப்புதொகை தற்போது 52 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. கூட்டுறவு சங்கங்களின் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன, என்றார்.
மேலும் பேசிய அவர், "திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் கனவோடு திண்ணை எப்போது காலி ஆகுமென இலவு காத்த கிளி போல் காத்திருக்கிறார். அவர் கடைசிவரைக்கு காத்திருக்க வேண்டியதுதான்" என தெரிவித்தார்.