ETV Bharat / city

அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தற்கொலை! - suicide

இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தற்கொலை!
அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தற்கொலை!
author img

By

Published : Sep 27, 2022, 11:13 AM IST

சென்னை: இந்து சமய அறநிலைய துறை அமைச்சராக இருந்து வரும் பி.கே சேகர்பாபுவின் உடன் பிறந்த அண்ணனான தேவராஜுலு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தேவராஜுலுவிற்கு கடந்த 10 வருடங்களாக பல்வேறு உடல் உபாதை பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நோயால் கடும் அவதிப்பட்டு தேவராஜுலு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு தேவராஜுலு அவரது வீட்டின் முதல் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்த போது தேவராஜுலு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

உடனடியாக அவரது குடும்பத்தினர் ஓட்டேரி காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில்,சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், தேவராஜுலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நோயால் தனது தந்தை தற்கொலை செய்துகொண்டதாகவும், தனது தந்தையின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என தேவராஜுலுவின் மகன் லோகேஷ் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஓட்டேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அனுமதியின்றி செல்போனை பயன்படுத்தியதை தட்டி கேட்டததால் தாக்குதல் ; பரிதாபமாக உயிரிழந்த பட்டதாரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.