தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் உள்ள அரசு அச்சக பணியாளர்களுக்கான குடியிருப்புகளை முற்றிலும் இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகள், முதல்கட்டமாக 160 குடியிருப்புகள் ரூபாய் 34,54,00,0000 கோடி செலவில் கட்டப்படும் என எழுதுபொருள் மற்றும் அச்சு, செய்தி மற்றும் விளம்பரம் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேரவையில் தெரிவித்துள்ளார்.
அதுகுறித்த அறிவிப்புகள் பின்வருமாறு:
1.தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் உள்ள அரசு அச்சக பணியாளர்களுக்கான குடியிருப்புகளை முற்றிலும் இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகள், முதல்கட்டமாக 160 குடியிருப்புகள் ரூபாய் 34,54,00,0000 கோடி செலவில் கட்டப்படும்.
2. முதல்முறையாக அச்சு துறைக்கு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், 53 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் காகிதம் மற்றும் அச்சுப்பொருள்களை தரப் பரிசோதனை செய்யும் கருவிகள், டி65 ஒளியூட்டு வசதி மற்றும் பிற சிறப்பு அம்சங்களுடன், ரூபாய் 55 லட்சத்தில் ஆய்வகக் கட்டடம் கட்டவும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவும் மொத்தம் 1,08,72,000 நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
3. அரசு மைய அச்சகத்திற்கு நான்கு வண்ண எண்ணிம உற்பத்தி அச்சுப்பொறி ரூபாய் 1,15,00,000, கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.
4. அரசு மைய அச்சகம் மற்றும் 5 கிளை அச்சகங்களுக்கு கருப்பு வெள்ளை எண்ணிம மை தெளிப்பு உற்பத்தி அச்சுப்பொறி ரூ96 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும்.
5. நான்கு வண்ண மை தெளிப்பு உற்பத்தி அச்சுப் பொறி இயந்திரங்கள் ரூ 60 லட்ச மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.
6. சென்னை அரசு எழுதுபொருள் அலுவலக கட்டிடம் ரூ.1.25 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
7. அரசு மைய அச்சகம் மற்றும் அனைத்து கிளை அச்சகங்களுக்கு நெகிழி அடித்தட்டுகள் ரூ.21 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.
இதையும் படிங்க: தஞ்சை தேர் விபத்து: பேரவைக்குள் அதிமுகவினர் தர்ணா.. கடும் அமளி!