ETV Bharat / city

சிங்கங்களுக்கு கரோனா வனத்துறை அலுவலர்கள் மூலம் பரவியதா? ஈடிவி பாரத்திற்கு அமைச்சர் பேட்டி - வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரனோ

சிங்கங்களுக்கு கரோனா
சிங்கங்களுக்கு கரோனா
author img

By

Published : Jun 5, 2021, 1:34 PM IST

Updated : Jun 5, 2021, 5:37 PM IST

13:23 June 05

வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வனத்துறை அலுவலர்களிடமிருந்து அவைகளுக்கு கரோனா பரவவில்லை என ஈடிவி பாரத் செய்தி தளத்திற்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில்  மே 26ஆம் தேதி  5 சிங்கங்கள் தொடர் இருமலால் பாதிப்படைந்தன. இதையடுத்து வனவிலங்கு மருத்துவர்கள் உடனடியாக சென்று உரிய முறைப்படி ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.  மேலும் பூங்கா  நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, மேற்படி சிகிச்கைக்காக மருத்துவ நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அனுப்பி வைத்தது.  

இந்நிலையில், 11 சிங்கங்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தமிழ்நாடு கால்நடை பல்கலைகழகத்திற்கும், மூக்கு மற்றும் மலவாயிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபால், மத்தியபிரதேசத்தில் உள்ள ஆய்வு கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.  இதற்கிடையில்  ஜூன் 3ஆம் தேதி மாலை,  9 வயதான நீலா எனும் பெண் சிங்கம் உயிரிழந்தது.  இப்பெண் சிங்கத்திற்கு முதல் நாளிலிருந்தே சில திரவங்கள் மூக்கிலிருந்து சுரந்து கொண்டிருந்ததாக பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சிங்கங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதியனாது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விலங்கு காப்பாளர்களுக்கும்,  கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள விலங்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது.  

இந்நிலையில் சிங்கங்களுக்கு வனத்துறை பணியாளர்கள் மூலம் கரோனா தொற்று பரவவில்லை என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஈடிவி பாரத் செய்தி தளத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சிங்கங்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.  

Last Updated : Jun 5, 2021, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.