ETV Bharat / city

பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் அதிகரிக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

author img

By

Published : Nov 4, 2021, 9:06 AM IST

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்து இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தாம்பரம் பேருந்து நிலையயத்தில் செய்துள்ள வசதிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பேருந்து பற்றாக்குறை என்பது கிடையாது, மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். பயணிகள் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் அதிகரிக்கப்படும். சென்னையில் 6 இடங்களில் பேருந்து நிலையம் அமைத்துள்ளதால் போக்குவரத்து நெரிசலின்றி பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.

சென்னையிலிருந்து இதுவரை 3.84 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையிலிருந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஆயிரத்து 853 ஆம்னி பேருந்துகள் சென்னையில் சோதனை செய்யப்பட்டுள்ளன.

அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளிடம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது". என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு முடிவு வெளியீடு - மாணவர்களுடன் போனில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.