ETV Bharat / city

"சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டது": சட்டத்துறை அமைச்சர்

author img

By

Published : Jul 12, 2022, 3:01 PM IST

அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதால் தான் என்றும், யாருக்கும் சாதகமாக அரசு செயல்படவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்தான் அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டது

சென்னை: டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான 2022-23 ஆண்டிற்கான விண்ணப்ப பதிவை தரமணியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த பரிந்துரைகளை பார்க்கும் போது இது தமிழ்நாடு அரசு மட்டும் செய்யக்கூடிய ஒன்று அல்ல என்பது தெரிகிறது.

தமிழ்நாட்டில் தடை செய்தாலும், அண்டை மாநிலங்கள் இருந்து கூட ரம்மி விளையாடும் வாய்ப்பு இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் கேட்டு பொதுவான சட்டம் வருவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். நாடு முழுவதும் சட்டம் கொண்டு வந்தால் தான் இதை ஒழிக்க முடியும்.

தமிழ்நாட்டில் ரம்மி விளையாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கையும் அரசு எடுக்கும். மேகதாது வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 19 நடக்கிறது. சட்ட வல்லுநர்கள் உடன் ஆலோசித்து இருக்கிறோம். அதிமுக பிரச்சனையில் நாங்கள் யாருக்கும் உடந்தையாக இல்லை.

அங்கே பிரச்சனை செய்கிறவர்கள் நாங்கள் பிரச்சனை செய்ய போகிறோம் என சொல்லி விட்டா செல்வார்கள்?அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதால் தான். இதில் யாருக்கும் சாதகமாக தமிழ்நாடு அரசு செயல்படவில்லை. பிரச்சனை ஏற்பட்ட பிறகு காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

காரைக்குடி சட்டக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும். தமிழ்நாட்டில் தேவையான சட்டக்கல்லூரி உருவாக்க நிதி கூடுதலாக தேவைப்படுகிறது. இருந்தாலும் காரைக்குடியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும். கூடுதல் கல்லூரி உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

இதையும் படிங்க: விளையாட்டால் வந்த வில்லங்கம்; ஜிபே நம்பரால் மாட்டிய ஜோக்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.