மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 52ஆவது நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசுகையில், “மறைந்த சட்டப்பேரவை மூத்த உறுப்பினர்களுக்கு இன்று (பிப். 3) இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இரங்கல் தீர்மானத்தில்கூட திமுக சட்டப்பேரவையைப் புறக்கணித்துள்ளது. ஸ்டாலின் மூத்தத் தலைவர்களுக்குக்கூட மரியாதை செலுத்த தயாராக இல்லை" என்றார்.
ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர், “ஜெயலலிதா நினைவிடத்தில் முடிக்கப்படாத பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனால் இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவும் பாதுகாப்புக்காகவும் நினைவிடம் மூடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.