சென்னை: இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது அமைச்சர் ரகுபதி நீதி நிர்வாகம் தொடர்பாகவும், சிறைகள் - சீர்திருத்தப் பணிகள் தொடர்பாகவும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
நீதி நிர்வாகம்
- காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தில் தற்போது இயங்கிவரும் மாவட்ட நீதிமன்றம் எண் II ஐ முதன்மை மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றமாக மாற்றி அமைக்கப்படும்.
- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தற்போது இயங்கிவரும் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றமாக மாற்றி அமைக்கப்படும்.
- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தற்போது இயங்கிவரும் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் மாற்றியமைக்கப்படும்.
- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
- தென்காசி மாவட்டம் தென்காசியில் ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
- ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
- காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தில் ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
- திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
- சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குரைஞர்களுக்கான கூடுதல் வளாக கட்டடம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் 4.25 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
சிறைகள் - சீர்திருத்தப் பணிகள் அறிவிப்புகள்
- சென்னையில் உள்ள சிலைகள், சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை அலுவலகத்திற்கு 40 கணினிகள், 10 நகல் எடுக்கும் இயந்திரங்கள் 44 லட்சம் ரூபாய் செலவில் தொடரா செலவினத்தில் கொள்முதல் செய்யப்படும்.
- அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள் - புழல், வேலூர், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, மாவட்ட சிறை, இளம் குற்றவாளிகள் சீர்திருத்தப் பள்ளி புதுக்கோட்டை ஆகியவற்றிற்கு 15 கனரக சலவை இயந்திரங்கள் 60 லட்சம் ரூபாய் தொடரா செலவினத்தில் கொள்முதல் செய்யப்படும்.
- அனைத்து மத்திய சிறைகளுக்கும் ஒன்பது ஊடுகதிர் அலகிடல் கருவிகள் பழைய எந்திரங்களுக்கு மாற்றீடாக 180.00 லட்சம் தொடரா செலவினத்தில் கொள்முதல் செய்யப்படும்.
- அனைத்து மத்திய சிறைகளில் உள்ள பணியாளர் குடியிருப்புகளில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட சவ்வூடு பரவல் முறை குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் நிறுவப்படும்.
- சிறைகளைச் சீர்திருத்த மையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிறைவாசிகளின் சிறை தண்டனை முடிந்ததும் அவர்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதையும் படிங்க: மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயம் இல்லை - தமிழ்நாடு அரசு