ETV Bharat / city

எந்தச் சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது: அமைச்சர் பி.தங்கமணி

சென்னை: எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்நாட்டுக்கு மின்வெட்டு வராது என மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

author img

By

Published : Feb 29, 2020, 4:44 AM IST

Minister of Interior P Thangamani byte in Chennai

சென்னை தமிழ்நாடு மின்துறை தலைமை அலுவலகத்தில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மேலாண்மை மையத்தை அமைச்சர் பி. தங்கமணி தொடங்கிவைத்தார்.

இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் ரூ.49 கோடி மதிப்பீட்டில் ஏழு மாநிலங்களில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மேலாண்மை மையங்களை காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

இது குறித்து அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

சூரியசக்தியை பொருத்தவரை 4000 மெகாவாட் கிடைத்து கொண்டிருக்கிறது. அனல் மின்சாரம் தற்போது 15,500 மெகாவாட் கிடைத்து கொண்டிருக்கிறது.

எதிர்காலத்தில் 17 ஆயிரத்து 500 ஆக உற்பத்தி செய்வோம் என்று எதிர்பார்க்கிறோம். எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்நாட்டுக்கு மின்வெட்டு வராது.

இவ்வாறு அமைச்சர் பி. தங்கமணி கூறினார்.

புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மேலாண்மை மையம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காற்றாலைகள், சூரியசக்தி மின்நிலையங்கள், அனல்மின் நிலையங்களை கண்காணிக்கவும் பாதுகாக்கவும், எவ்வளவு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது என்பதை கண்டறியவும் முடியும்.

இதையும் படிங்க: 'ஒருபுறம் நரசிம்மர்! மறுபுறம் ஆஞ்சநேயர்!' - சிலைக்குள் ஒளிந்துள்ள கலை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.