ETV Bharat / city

உணவுப்பொட்டலங்கள் வழங்கும் திட்டத்தில் நிதிப்பற்றாக்குறை - அமைச்சரின் செயல்பாடு என்ன? - Minister of Hindu Religious Affairs PK Sekarbabu funded

கரோனா நோய் தடுப்புப்பணியில் கோயில்கள் சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒரு லட்சம் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படும் திட்டத்திற்குத் தேவையான பற்றாக்குறை நிதியை அன்னதானத்திட்ட மைய நிதியிலிருந்து வழங்க, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

Minister of Hindu Religious Affairs PK Sekarbabu funded

author img

By

Published : May 27, 2021, 3:07 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று நோயினால் பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாட வாழ்க்கைக்குப் போராடி வரும் நிலையில், அவர்களது பசியினைப் போக்கும் விதமாக, கோயில்களில் இருந்து, உணவுப்பொட்டலங்களை உணவு தேவைப்படுவோருக்கு வழங்கிடுமாறு முதலமைச்சர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அதனை செயல்படுத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, கோயில்களில் உணவு தயாரிக்கப்பட்டு உணவுப்பொட்டலங்களாக நாள்தோறும் ஏழை எளியோருக்கு மே 12ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்ததால், பொது மக்கள் அதிகளவில் பயன்பெறும் திட்டமாக வரவேற்பைப்பெற்றது.

ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜுன் 5ஆம் தேதி வரை உணவுப்பொட்டலங்களை வழங்கிட கோயில் நிர்வாகங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இச்சேவையினை தொடரும் நிலையில் 349 திருக்கோயில்களில் போதிய நிதி ஆதாரம் இல்லாதது அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் கோயில்களுக்கு இத்திட்டத்திற்கு தேவைப்படும் நிதி ஆதாரத்தினை கணக்கிட்டதில் ரூ.2 கோடியே 51 லட்சத்து 7ஆயிரத்து 647 தேவைப்படுவதாகத் தெரியவந்தது.

எனவே, கரோனா பெருந்தொற்றுக்காலத்தில் உணவு தேவைப்படுவோருக்கு கோயில்கள் வாயிலாக உணவுப்பொட்டலங்களைத் தொடர்ந்து வழங்கிடத்தேவைப்படும் நிதியினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும் அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து, கோயில்களுக்கு வழங்கிட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.