ETV Bharat / city

'இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் கிடைக்கும்' - அமைச்சர் நாசர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.13) ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட 36 புதிய அறிவிப்புகளை பால் வளத்துறை அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் நாசர்
அமைச்சர் நாசர்
author img

By

Published : Apr 13, 2022, 10:01 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.13) பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், 'காரைக்குடியில் புதிய பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு செயல்படுத்தப்படும். 2 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் வருங்காலத்தில் ஆவின் தயாரிப்புகள் அனைத்தும் நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், 'செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சிறுப்பாக்கத்தில் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனுடைய பால் பண்ணை ரூ.71.22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். மேம்படுத்தப்பட்ட நவீன தீவனத் திட்டம் ரூ.50 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும். மாதவரத்தில் 50 நபர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி ரூ.50 லட்சம் செலவில் வழங்கப்படும்.

கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 1 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனுடைய மையம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற, பால் உற்பத்தியாளர்களின் வாரிசுதாரர்கள் பரிசுத் தொகை வழங்கி சிறப்பிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தொடர் மழையிலும் 'தடையில்லா பால் விநியோகம்' - பால்வளத்துறை அமைச்சர் நாசர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.