சென்னை தலைமைச் செயலகத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், “தமிழ்நாட்டில் இருக்கும் டென்னிஸ் வீரர்கள் மற்றும் டென்னிஸ் ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
வரும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(மே.14) கையெழுத்தானது.
அகில இந்திய சதுரங்க கூட்டமைப்போடு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கை சர்வதேச தரத்தில் மறுசீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டென்னிஸ் விளையாட்டு போட்டிகளுக்கு நடத்துவதற்கு முதற்கட்டமாக அரசு 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் பீச் வாலிபால் நடத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு புதிதாக இரண்டு நாய்க்குட்டிகள் வருகை!