தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் மா. மதிவேந்தனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
அவர் நலமுடன் இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.