ETV Bharat / city

மரத்திற்கு நடிகர் விவேக் பெயர் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

author img

By

Published : May 3, 2022, 5:39 PM IST

நடிகர் விவேக்கின் பெயரால் ஆன சாலைக்கான பெயர்ப் பலகையை திறந்து வைத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், ' நட இருக்கும் ஒரு லட்சமாவது மரத்திற்கு விவேக்கின் பெயர் சூட்டப்படும்' என்று கூறினார்.

மரத்திற்கு நடிகர் விவேக் பெயர் - அமைச்சர் சுப்பிரமணியன்!

சென்னை 'சைதாப்பேட்டையில் 98ஆயிரம் மரங்கள் தற்போது வரை நட்டு இருக்கிறோம். 1 லட்சம் மரங்கள் நட்டு, அந்த 1 லட்சமாவது மரத்திற்கு நடிகர் விவேக் மரம் என்ற பெயர் வைக்க இருக்கிறோம்' என விருகம் பாக்கத்தில் நடிகர் விவேக் பெயரில் சாலையைத் திறந்த பிறகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகராக வாழ்ந்து மறைந்த பத்மஸ்ரீ விவேக் வீடு அமைந்துள்ள விருகம்பாக்கம் பத்மாவதி சாலையை "சின்னக் கலைவானர் விவேக் சாலை" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பெயர்ப் பலகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியின் மேயர், துணை மேயர், திரையுலகில் உள்ள முன்னணி நகைச்சுவை நடிகர்கள், இயக்குநர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பகுதி வாழ் பொதுமக்கள் பங்கேற்றனர். திரைப்பிரபலங்கள் இயக்குநர் பாக்யராஜ், பெஃப்சி சம்மேளனத் தலைவர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளி, தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன், பொன்வண்ணன், நடிகர் விஜயின் தாயார் ஷோபா , தாடி பாலாஜி , நடிகர் தாமு, மயில்சாமி, செல் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் நடிகர் விவேக்கினை நினைவுகூர்ந்து பேசினர்.

விவேக் எனது நண்பன்:பின்னர் நிகழ்ச்சியின் மேடையில் உரையாற்றிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "விவேக் எனது நீண்ட கால நண்பன். கோடை வெப்பத்திலிருந்து மக்கள் தங்களை எப்படித் தற்காத்துக்கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது. சைதாப்பேட்டை பகுதியில் நாட்டு மரங்கள் நிறைய நட்டு வைத்து இருக்கிறோம். இன்னும் இரண்டு ஆண்டில் வனத்தில் ஒரு தொகுதி என்ற நிலைமையில் சைதாப்பேட்டை தொகுதி இருக்கும்.

சைதாப்பேட்டையில் 98 ஆயிரம் மரங்கள் தற்போது வரையும் நட்டு இருக்கிறோம்.1 லட்சம் மரங்கள் நட்டு அந்த 1 லட்சமாவது மரத்திற்கு நடிகர் விவேக் மரம் என்ற பெயர் வைக்க இருக்கிறோம். ஆனால், அதனைப் பார்க்க அவர் தான் இல்லை என்பது வருத்தத்துக்கு உரியதாகும். பொதுவாக தற்போது பெயரைச்சாலைக்கு வைப்பது இல்லை. அப்படிப் பெயர் வைக்க வேண்டும் என்றால் பல்வேறு இடங்களில் அதற்கு அனுமதி வழங்க வேண்டும். ஆனால் விவேக் பெயரை வைக்க வேண்டும் எனக்கேட்டவுடன் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

விவேக் மறைவுக்கு 2 நாட்களுக்கு முன்பு அப்போது இருந்த ஆளும் கட்சியாக இருந்தவர்கள் விவேக்கைத் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்கள். அவர் இறப்புக்கு 2 நாட்களுக்கு முன்புகூட, தடுப்பூசிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு உயிரிழந்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் 11 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். 88% நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் 2 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கிறார்கள். வரும் மே 8ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. மக்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

எப்பொழுதும் விவேக்கின் குடும்பத்திற்கும் தமிழ்நாடு அரசும், திமுகவும் துணை நிற்கும்" எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு இறுதியில் மரக்கன்று வழங்கப்பட்டது. மேலும் மரக்கன்றுகளை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நட்டு வைத்தார்.

இதையும் படிங்க:"சின்னக் கலைவாணர் விவேக் சாலை" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.