சென்னை: கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டர் சண்முகசுந்தரம் பெயரில் புதிய ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள முதல் இருக்கை. இதில், பணியமர்த்தப்படும் பேராசிரியர் இங்கிலாந்து நாட்டில் பணியாற்றி வருகிறார்.
இவர் ஆண்டுக்கு ஒரு முறை இணைப்பு கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிற்சி வழங்குவார். இந்த இருக்கையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. இது குறித்து நாளை அனைத்த மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. எங்கு தட்டுப்பாடு என்று புகார் வந்தாலும் அதனை 104 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். மருத்துவ பல்கலைகழக வரலாற்றில் இந்தியாவில் முதன் முறையாக ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு இருக்கைண் உருவாக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவ பல்கலைகழகத்தின் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டோம், ஆளுநர் எந்த முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என கேள்வி எழுப்பி இருந்தார். பல்கலைகழகம் தொடங்கும் நேரத்தில் எந்த முறை உள்ளதோ அவ்வாரே நடைபெறும் என பதில் அளித்துள்ளேன், எனவே ஒப்புதல் அளிப்பார் என நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் 18வயது சிறுவனுக்கு வழங்கிய சிகிச்சைக்கு பின் உயிரிழந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் சாந்திமலர், இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது.
எங்கு தவறு நடந்திருந்தாலும் அதற்கு மண்ணிப்பு கோருகிறேன், வருந்துகிறேன். இனி இது போன்று நடக்காமல், சிறப்பாக சிகிச்சையளிப்போம்” என அமைச்சர் முன்பு உறுதியளித்தார்.
இதையும் படிங்க: மரபணுவின் மூலம் மார்பகப் புற்றுநோய் வருவதையும் தடுக்கலாம் - மருத்துவர்களின் பிரத்யேகப்பேட்டி