ETV Bharat / city

ஒமைக்ரான் அச்சம் வேண்டாம்! - மா. சுப்பிரமணியன் - கரோனா தொற்று

ஒமைக்ரான் அச்சப்பட வேண்டிய தொற்றோ, பதற்றப்பட வேண்டிய தொற்றோ அல்ல என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
author img

By

Published : Jan 6, 2022, 8:50 PM IST

சென்னை: கலைவாணர் அரங்கில் 2022ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 5) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 6) நடைபெற்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் பரவிவருகிறது. நேற்று முதலமைச்சர் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள்

இந்தக் கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். கரோனா வைரசைவிட, ஒமைக்ரான் வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. எனவே, மருத்துவமனைகளில் அதிக படுக்கைகளை உருவாக்கித் தர வேண்டும்" என்றார்.

இதற்குப் பதிலளித்த மா. சுப்பிரமணியன், "எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு அறிகுறி இல்லாதவர்கள் ஏழு நாள் வீட்டுத் தனிமையில் இருக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

25 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் தொற்று பதிவாகி உள்ளது. ஒமைக்ரான் பதற்றப்பட வேண்டிய, அச்சப்பட வேண்டிய தொற்று அல்ல; சுமார் ஒன்றே முக்கால் லட்சம் படுக்கைகள் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன.

நாளொன்றுக்கு 3.28 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தல்

மக்களை மருத்துவமனையை நோக்கி திசைதிருப்பும் பணிகளை எந்த அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டாம். மூன்று லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு நாள் ஒன்றுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இதுவரை எட்டு கோடியே 71 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: TASMAC: மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே. மணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.