சென்னை: சைதாப்பேட்டையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் திடீர் நகர்ப் பகுதியிலுள்ள, புதிய குடியிருப்புகள் கட்டப்படுவதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தா. மோ. அன்பரசன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், "இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்குக் கட்டப்படும் வீடுகளில், இங்கு ஏற்கெனவே வசித்தவர்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
சனிக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்
அதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், " இனிமேல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.
பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி பெரும்பாலும் 10 நாளுக்குள் நிறைவு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 15 முதல் 18 வயதுக்குப்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், பள்ளி கல்லூரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டால் மாற்று வழிகளில் சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும்" எனவும் தெரிவித்தார்.
இரவு நேரத்தில் ஊரடங்கு அறிவிப்பு
மேற்படி, தமிழ்நாடு அரசு ஜனவரி 6ஆம் தேதி முதல் இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைகளில் அத்தியாவசியமான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், பெட்ரோல் பங்குகள் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு ஊரடங்கு